சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.
25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். |
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? கிறித்துவில் வாழ்வு: உண்ணக் கவலை, உடுக்கக் கவலை, உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை. எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன? எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே! விண்ணின் அருளால் வாழும் நமக்கு, வேண்டாம் இந்த நோய்தரும் கவலை. கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்; காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே! ஆமென். |