குழந்தை ஊழியர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:21-22.
20ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். |
21அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. கிறித்துவில் வாழ்வு: எத்தனை ஆண்டுகள் முடித்திருந்தாலும், இறைவனின் முன் நாம் குழந்தைகளே. முத்தினை ஒத்த இறையருள் வாக்கை, மொழிவதிலும் நாம் பிள்ளைகளே! இத்தரை மாந்தர் யாவரும் மீள, இயேசுவைப் போன்று வாழுங்களே. மொத்தமும் அவரது காலடி படைத்து, முடிவிலா அரசில் ஆளுங்களே! ஆமென். |