குள்ளமும் கள்ளமும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:1-4.
1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
கிறித்துவில் வாழ்வு:
குள்ளமென்ற அளவினைக் கண்டு,
குறை சொன்னேனென வருத்தமுண்டு.
உள்ளங்காணா மனிதனைக் கொண்டு,
ஊர் விளங்காதெனக் கருத்துமுண்டு.
கள்ள நெஞ்சு இருப்பதைக் கண்டு,
கழுவித் துடைத்தேன், திருத்தமுண்டு.
வெள்ளமாகும் வாக்கினைக் கொண்டு,
வெளுப்பதுதானே பொருத்தமுண்டு!
ஆமென்.