குறையில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2 : 10 -12.
10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எந்தத் திங்கள், எந்த ஆண்டு
எந்த நாளெனத் தெரியவில்லை.
என்றபோதும் இயேசு பிறப்பை,
எவரும் மறுக்க இயலவில்லை.
வந்து பிறந்த குழந்தை தந்த,
வாழ்வில் மகிழ்வு குறையவில்லை.
வாழ விரும்பின் இயேசுவைப் பாரும்,
வழியாம் அவரில் குறையுமில்லை!
ஆமென்.