காற்றில் அசையும் நாணலல்ல!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:24-26.
24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
25 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
காற்றில் அசையும் நாணலல்ல,
கடவுளின் ஈவாம் பற்றுறுதி.
தோற்று மறையும் தூளுமல்ல,
தூய்மை நாடும் நம்முறுதி.
ஏற்று வாழும் கிறித்தவரே,
இயேசு யாரெனச் சொல்வோமே.
மாற்றுவோம் பலர் ஐயங்களை;
மாறாப் பற்றால் வெல்வோமே!
ஆமென்.