கல்லில் ஈரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:8-9.
8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
கிறித்த்துவில் வாழ்வு:
இல்லில் இன்று இயேசு வந்தால்,
என்னவாகும் உள்ளம்?
நெல்லில் உள்ள பதரைப்போல,
நீக்குவாரே கள்ளம்.
சொல்லில் காணும் நன்மை யாவும்,
செயலாகுமோ கூறும்?
கல்லில் உள்ள நீரைப்போல,
கனிவதையும் பாரும்!
ஆமென்.