விழித்திடும் கண்ணே விளக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:34-36.
34கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். |
35ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. |
36உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார். கிறித்துவில் வாழ்வு: விழித்திடும் கண்ணே விளக்காகும்; வீணாய் வைத்தால் இருளாகும். செழித்திடும் வாழ்விற்கு வழியாகும்; செயல்படுத்துவதோ அருளாகும். பழித்திடும் கூட்டமும் பலவாகும்; பாராதீர் அவை மருளாகும். கழித்திடும் இரவும் பகலாகும்; காண்பீர் வாழ்வின் பொருளாகும்! ஆமென். |