எழுபது!
எழுகிற எழுபதை எனக்கும் கொடுக்கும்,
என்னுயிர் இறையே போற்றுகிறேன்.
விழுகிற உடலை விழாதும் தடுக்கும்,
விண்மகன் ஏசுவே போற்றுகிறேன்.
தொழுகிற நெஞ்சில் உண்மையும் ஊற்றும்,
தூய்மையின் ஆவியே போற்றுகிறேன்.
அழுகிற நாட்டின் அவலமும் மாற்றும்,
அதுதான் வேண்டல், போற்றுகிறேன்!
-கெர்சோம் செல்லையா.