அவரது எளிமையில்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:51-52.
51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
கிறித்துவில் வாழ்வு:
பெருமை என்னும் பெரும்பேய் பிடித்து,
பெயரை இழந்தவர் பலருண்டு.
சிறுமை எனினும் நன்மை புரிந்து,
சிறப்புடன் வாழ்ந்தவர் சிலருண்டு.
வெறுமையாகும் இப்புவிப் பெருமை,
வீண் வீண் என உணர்வோமே.
அருமையான திருமகன் கண்டு,
அவரது எளிமையில் இணைவோமே!.
ஆமென்