எருசலேம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:32-33.
32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.
33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
புனிதம் என்று புகழ்ந்த இடமும்,
பொய்யரின் கோட்டையாயிற்றே.
மனிதம் வெறுத்த கொலையுங்கூட
மன்னர்க்கு வேட்டையாயிற்றே.
இனிதாய் வாழ விரும்பும் எவரும்,
எதிர்த்து இம்மலை ஏறாரே.
தனியாய் வெல்ல இயேசு சென்றார்;
தம் குருசெடுத்துப் போறாரே!
ஆமென்.