என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி,
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன்.
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன்.
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்;
படைத்தருள்கிறார் என்னிறைவன்.
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி,
நானிலம் ஆள்கிறார் என்னிறைவன்!
-செல்லையா.