உருவில் அழகு குறையும்போது….
நற்செய்தி மாலை: மாற்கு 10:49-52.
“இயேசு நின்று, ‘ அவரைக் கூப்பிடுங்கள் ‘ என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ‘ துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ‘ என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ‘ உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ‘ ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ‘ என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.”
நற்செய்தி மலர்:
உருவில் அழகு குறையுமானால்,
ஒப்பனை செய்ய ஓடுகிறோம்!
தெருவில் அழுக்கு நிறையுமானால்,
தென்படுவோரைச் சாடுகிறோம்!
எருவில்லாத பயிரைப் பார்த்து,
ஏங்கலும் கொண்டு வாடுகிறோம்.
கருவிலிருந்தே பார்வை இல்லார்,
களிப்புடன் வாழ பாடுவோமா?
ஆமென