உயிர் நீர் தாருமே!
நற்செய்தி: யோவான் 4:13-14.
நல்வழி:
காய் அற்று, கனியற்று, கறங்கிடும் எனது,
கனவு வாழ்க்கை பாருமே.
ஓய்வற்று, உயர்வற்று, உறங்கிடும் மனது,
உயிர்பெற வேட்கை தீருமே.
நோய் அற்று, நோவற்று, பறந்திட எந்தன்,
நெஞ்சுள் உயிர் நீர் தாருமே.
தேய்வற்று, தீங்கற்று, சிறந்திடும் உந்தன்,
திருவருட் காலடி சேருமே!
ஆமென்.
-செல்லையா.