உண்மையில்லாதோர்!

உண்மையில்லாதோர் சேரும் இடம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:45-46.

45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
46அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
உண்மையில்லாதோர் சேரும் இடத்தில்,
ஒரு பெரும் பங்கு சேர்ப்போர்தான்,
அண்மையில் நமது தலைவர்களாயினர்;
அதுதான் இன்றைய வரலாறு.
கண்ணினில் நீரும், நெஞ்சினில் வலியும்,
கடந்த நாட்களில் தந்தவர்தான்,
வெண்மையாய் மாறி, மனந்திருந்திடுவார்;
விடுதலை வாக்கை நீ கூறு!
ஆமென்.

Leave a Reply