உண்மையும் மதியும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா: 12:41-44.

41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
43எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
உண்மையும் மதியும் உயர்வின் வழியாம்;
உயர விரும்பின் இவையிரு விழியாம்.
விண்ணினின் அரசன் உரைக்கும் மொழியாம்;
விரும்பாதிருப்பின் விளையுமே பழியாம்.

மண்ணினில் மாந்தர்க்கு வேறே வழியாம்.
மாயையைக் காணா மயங்கிய விழியாம்.
எண்ணுவீர் உயர இறைவனின் மொழியாம்;
ஏறும் வழியில் இல்லை பழியாம்!
ஆமென்.

Leave a Reply