இல்லை, நண்பா, இல்லை!
‘சர்மா’ என்று பெயரும் இல்லை;
சாதி காட்டும் உயர்வும் இல்லை.
‘வர்மா’ என்று தொழவும் இல்லை.
வறுமை மட்டும் விழவும் இல்லை.
‘கர்மா’ என்று அழைக்கவுமில்லை.
கதைகள் கட்டிப் பிழைக்கவுமில்லை.
‘தர்மா’ இங்கு குறையின்றி இல்லை.
தந்துவூட்டும் இறையன்றி இல்லை!
-செல்லையா.