இறைவனுக்குக் கடன் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:20-21.
“அவர் இயேசுவிடம், ‘ போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ‘ என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ‘ என்று அவரிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
கண்முன் காணும் எளியோர் வாழ,
கனிந்து உதவி புரிபவர் யார்?
விண்ணின் அரசர் இவருரு எடுத்து,
வேண்டி நிற்பதைத் தெரிபவர் யார்?
எண்ணும் காசை ஏழைக்கு ஈந்தால்,
இறைவன் கடனாய் எண்ணுகிறார்.
மண்ணில் செய்யும் நன்மை கண்டு,
விண் வீட்டறையைப் பண்ணுகிறார்!
ஆமென்.