தெய்வத்தின் பலியாடு!
நற்செய்தி: யோவான் 1:35-36.
நல்வழி:
தவற்றின் முடிவு தண்டனையாகும்.
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்?
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.
இவற்றைத் திருத்த யாராலாகும்?
இறைவனால்தான் தண்டனை போகும்.
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும்,
ஆண்டவராலே இறப்பும் போகும்!
ஆமென்.
-செல்லையா.