இருளின் மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:52-53.
52 பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53 நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
நெருப்பாம் பகையை நெஞ்சுள் வைத்து,
நெய்போல் பகலில் உருகிடினும்,
கருப்பாம் புகையை மறைக்கத் தவித்து,
கயமையை இரவில் கக்கிடுவார்.
பொறுப்பாய்ப் பெற்ற பதவியை வைத்து,
புனிதர் போன்று நடித்திடினும்,
வெறுப்பால் விளைந்த வெறியும் இழுத்து,
வீதியில் போட, நக்கிடுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.