இணைப்பது இறைவன், பிரிப்பது பிசாசு!
நற்செய்தி மாலை: மாற்கு 10:5-9.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ‘ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சிரித்து வாழ, வேண்டும் என்று,
சீரிய கருத்து, கொண்டவரே,
கரித்து கொட்டும், மனிதர் முன்பு,
கடவுளின் வாக்கு, எண்வீரே.
விரித்து வைக்கும், வலையில் கன்று,
விழுமா என்று, பார்ப்பார் போல்,
பிரித்து வைக்கும், நோக்கில் இன்று,
பிசாசும் உழைப்பது, காண்பீரே!
ஆமென்.
