இகழும் கள்வன்!

இகழும் கள்வன்!  
கிறித்துவின்வாக்கு:  லூக்கா 23: 39.  

39
  அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  
என்ன  எதுவெனத் தெரியாமல்,  
இகழ்வோர் நம்மில் பலருண்டு.  

சொன்ன கள்வனும் இவரைப்போல், 
சொல்வதில் என்ன வியப்புண்டு?  
முன்னும் பின்னும் அறியாமல்,  
மொழிந்தால் என்ன பயனுண்டு? 
இன்னாள் இதனை நாமுணர்ந்து,  
ஏசுவை அறிந்தால் மீட்புண்டு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

Leave a Reply