கிறித்துவில் வாழ்வு:
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,
என்று நழுவும் நண்பர்களே,
உறுதியாக உம்மில் வருமோ,
உணர்ந்த கள்வன் பண்புகளே?
அறுதி நேரம் அறியா வாழ்வில்,
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.
கருதி இன்றே திருந்தினால்தான்,
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.