ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?

ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:32-38.

32 தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34 யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35 நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36 சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37 லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38 ஏனோஸ் சேத்தின குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

கிறித்துவில் வாழ்வு:
ஆண்டு முடித்த அரசரைப் பாடி,
அறிக்கையாக்கினால், வரலாறு.
மாண்டு போகும் மக்களை நாடி,
மதிப்புரை எழுதுவார் நமில் யாரு?
வேண்டுகின்றோர் விடுதலையாக,
விண்வழி காட்டும் ஏடேது?
தோண்டுகின்றோர் தூய்மையாவார்;
தோல்வி என்பது கிடையாது!
ஆமென்.

Image may contain: text
Comments

Leave a Reply