அறியாத அவ்வேளை!

அறியாத அவ்வேளை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:38-40.

38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.40அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நெஞ்சைத் திருடும் தெய்வம் வந்து,
நேரில் அழைக்கும் அவ்வேளை,
கொஞ்சம்கூட அறியாததனால்,
கிறித்து போன்று வாழ்வோமே.
நஞ்சை இன்று அமுது என்று,
நம்பி வாழ்வை அழிக்காமல்,
கெஞ்சி நாமும் திருந்தி வாழ,
கிறித்து முன்பு தாழ்வோமே!
ஆமென்.

Leave a Reply