அறிகிற ஆண்டவர்!
நற்செய்தி: யோவான் 1:47-48.
நல்வழி:
அத்திச் செடியின் அடியில் அமர்ந்து,
அடியார் வேண்டல் ஏறேடுத்தார்
புத்திக்கெட்டா அவரது விருப்பை,
புனிதர் இயேசு அறிந்திட்டார்.
முத்திப் பேறு விரும்பும் எவரும்,
முதற்கண் வேண்டல் ஏறெடுப்பார்.
கத்திக்கூச்சல் போட்டிட வேண்டாம்;
கடவுள் நெஞ்சை அறிகின்றார்!
ஆமென்.
-செல்லையா.