அருட்பொழிவாளர்!
நற்செய்தி: யோவான் 4:25-26.
நல்வழி:
அருட்பொழிவாளர் ஒருநாள் வருவார்;
அடிமைகளுக்கு விடுதலை தருவார்.
விருப்புடன் யூதர் நோக்கி இருந்தார்;
வேற்றினத்தாரும் கேட்டுத் தெரிந்தார்.
திருவாக்குரைப்படி கிறித்துவும் வந்தார்;
தெய்வப்பாதை அமைத்தும் தந்தார்.
வெறுப்பாரிடத்தும் அன்பாய் இருந்தார்.
விடுதலையாளரும் அவர் வழி தெரிந்தார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.