கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:36-37.
கிறித்துவில் வாழ்வு:
மாண்டிடும் மனிதக் காட்டினிலே,
மண்டிக் கிடக்குமே அச்சம்.
தோண்டியெடுத்துப் பார்க்கையிலே,
தொடர்ந்தும் வருமே மிச்சம்.
வேண்டிடும் அடியார் வீட்டினிலே,
விளைந்து நிற்குமே அமைதி.
ஆண்டவர் அருள்வது காண்பதற்கே,
அழைப்பு ஏற்று வா நீ!
-ஆமென்.