அமைதி பெறுவீர்!
இறைவாக்கு: லூக்கா 2:27-32.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இறைவாழ்வு:
ஆண்டவர் மீட்பை அறிந்தவர் மட்டும்,
அமைதியை வாழ்வில் பெற்றிடுவார்.
மாண்டவர் இயேசுவை ஏற்காததினால்,
மனதினில் தோல்வி உற்றிடுவார்.
மீண்டவராக உள்ளம் மகிழ,
மீட்பர் இயேசுவை ஏற்றிடுவீர்.
தாண்டிச் செல்லும் புயல்களெல்லாம்;
தாங்கும் அவரைப் போற்றிடுவீர்!
ஆமென்.