அத்திமரம் துளிர்க்கிறதே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:29-31.
29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அத்திமரம் துளிர்க்கிறதே;
அருள்வாக்கு பலிக்கிறதே.
எத்திசையும் கலங்கிடுதே;
இயலாமல் புலம்பிடுதே.
புத்தியுள்ள மங்கையரே,
புனிதமுடன் தங்குவரே.
இத்திருச் சொல் ஏற்போரே,
இறையரசு பார்ப்பாரே!
ஆமென்.