அணைக்கும் அன்பு! கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:49-50.
49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். |
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். கிறித்துவில் வாழ்வு: என்னைச் சார்ந்த திருக்கூட்டந்தான் இறைவனின் மக்கள் என்றுரைத்தால், முன்னும் பின்னும் அறியா மூடன், முதலில் நான்தான், அன்பர்களே. இன்னும் இதுபோல் இறையறிவின்றி, இயம்பும் யாவையும் கைவிட்டு, தன்னலந் துறந்த இயேசு போன்று, தாழ்ந்து அணைப்போம், நண்பர்களே! ஆமென். |