அடியேன் விருப்போ, இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:20.
20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
கிறித்துவில் வாழ்வு:
வலியவர் உயர்ந்தவர் வாழ்விற்கென்று,
வழங்கும் அரசு, குறையரசு.
எளியவர் ஏழையர் உயர்விற்கென்று,
இயங்கும் அரசோ, நிறையரசு.
தெளிவுடன் நானும் தேடிப் பார்த்தேன்;
தென்படவில்லை, முறையரசு.
அளித்திடுவாரென நம்பவுமில்லை;
அடியேன் விருப்போ, இறையரசு!
ஆமென்.