அடங்கிவிட்டது அடியனின் ஐயம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:20-21.
20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். |
21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: கடந்து உள்ளில் வாழும் கடவுள், காணும்படியாய் வருவாரா? நடந்து வந்து நம்முன் தோன்றி, நன்மையை நமக்குத் தருவாரா? கிடந்தது புரண்டு கேள்விகள் கேட்டேன்; கிறித்து நெஞ்சில் வருமுன்னர். அடங்கிவிட்டது அடியனின் ஐயம்; ஆண்டவர் இயேசுவே என் மன்னர்! ஆமென். |