பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:5-8.
5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பத்து கொடுத்தால் முடியாதென்பார்;
பதினாயிரமெனில் அடிமையாவார்.
சித்துவிளையாடும் அரசியல் அறிஞர்,
சிறுமையிலேதான் கிடக்கின்றாரே!
மொத்தமாகவே அலகை கொடுத்தும்,
முடியாதென்றார் இறையின் மைந்தர்.
பித்தர் என்று மனிதர் நினைப்பார்.
புனிதரோ, நேர்வழி நடக்கின்றாரே!
ஆமென்.

ஏழையரோ துடிக்கின்றார்!

யாவருமே நடிக்கின்றார்!
 
கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதையறியா ஏழையரோ
எந்நாளும் துடிக்கின்றார்!
 
-கெர்சோம் செல்லையா.

சோதனைப் பாடும் வருவதுண்டு.

நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.