இறைப்பணியில் பெண்கள்!

இறைப்பணியில் பெண்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:2-3.
2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எந்த பணியை யாருக்கென்று,
இறைமகன் அறிந்து பணி கொடுத்தார்.
அந்த வகையில் ஆணுக்கிணையாய்
அன்னையர் கன்னியர் பணி எடுத்தார்.
இந்த நாளிலும் இயேசுவின் வழியில்,
இறைப்பணி பெண்கள் செய்கின்றார்.
சொந்த நலனைத் துறந்து ஆற்றும்,
தூயருக்கிரங்குவோர் உய்கின்றார்!
ஆமென்.

Image may contain: 3 people, baby
Comments

இறைவாக்கு கேட்பீரே!

இறைவாக்கு கேட்பீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:1.
1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடியாரே, அடியாரே,
அன்பு மொழி கேட்பீரே!
பொடியாகும் பூவுலகைப்
பொய்யினின்று மீட்பீரே.
தடியாலும் வாளாலும்,
தவறி விட்டார் நாட்டாரே.
மடியாமல் இவர் வாழ,
மறையறிவு கொட்டீரே!
ஆமென்.

Image may contain: text

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7: 47-50.
47 ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி;
48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவரின்
பாவமெல்லாம் ஒழியும்.
பெற்றுவரும் நன்மையினால்,
பேரன்பைப் பொழியும்.
கற்றறிந்த இறையறிவைக்
காண்பவர்க்கு மொழியும்.
சுற்றுமுள்ளோர் மீட்புறுவார்;
திறந்ததுவே வழியும்!
ஆமென்.

Image may contain: 1 person

விருந்து கொடுப்பார் உள்ளம்!

விருந்து கொடுப்பார் உள்ளம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:43-46.

43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.

கிறித்துவில் வாழ்வு:
விருந்து கொடுப்பார் நெஞ்சத்தை,
விண்ணின் அரசர் புரிந்துள்ளார்.
இருந்து போங்கள் என்பாருள்,
இருக்கும் நஞ்சும் அறிந்துள்ளார்.
திருந்துவாரின் செயல்பாட்டைத்
தெரிந்து தெய்வம் அழைத்துள்ளார்.
அருந்துவோம் நாம் அவரன்பை;
அழைப்பை ஏற்றார் தழைத்துள்ளார்!
ஆமென்.

Image may contain: people sitting, table and indoor

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

மின்னலைப் போன்று மிளிர்ந்து மறையும்,
மேதினி வாழ்வை ருசிக்கும் நாம்,
இன்னொரு ஆண்டை இனிதாய்ப் பெறுதல்,
இறைவன் கொண்ட இரக்கமாம்.
நன்மையை விதைத்து நன்மையை அறுக்கும்,
நல்லோர் உலகை விரும்பும் நாம்,
என் செய்தோமென எண்ணி உழைப்பின்,
இனியும் வாழ்வைப் பெருக்குமாம்!

-கெர்சோம் செல்லையா.

எண்ணிலடங்கா என் பாவம்!

எண்ணிலடங்கா என் பாவம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:40-42.
40 இயேசு அவளை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பண்ணும்போது தீமையென்று,
பாவி எனக்குப் புரியவில்லை.
எண்ணும்போது எண்ணிக்கையும்
எத்தனையென்று தெரியவில்லை.
மண்ணாய் நானும் அழியாதிருக்க,
மாபெரும் அன்பைப் பொழிபவரே,
விண்ணை எட்டும் மன்னிப்பருளை,
விழுந்து பணிந்து மொழிவேனே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and text

பரிவின் பார்வை!

பரிவின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39.
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,
38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
கண்ணில் காணும் இழிவு நீங்க,
கடிந்து கொண்டால் சென்றிடுமோ?.
புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால்,
புரையோடிடுதல் குன்றிடுமோ?
பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க,
பரிந்து அணைத்தால் நின்றிடுமே.
எண்ணை மருந்தாய் நாமிருப்போம்;
இயேசு வழியில் வென்றிடுமே!
ஆமென்.

Image may contain: text

பரிவின் பார்வை!

பரிவின் பார்வை! கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39. 36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, 38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். கிறித்துவில் வாழ்வு: கண்ணில் காணும் இழிவு நீங்க, கடிந்து கொண்டால் சென்றிடுமோ?. பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க, பரிந்து அணைத்தால் நின்றிடுமே. புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால், புரையோடிடுதல் குன்றிடுமோ? எண்ணை மருந்தாய் நாமிருப்போம்; இயேசு வழியில் வென்றிடுமே! ஆமென். Image may contain: text Like Comment Share Comments

ஊண் உடை அன்று!

ஊண் உடை அன்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:33-35.
33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உண்டு மகிழ்ந்து  உரைப்பாருண்டு;
உண்ணா நிலையில் உரைப்பதுமுண்டு.
முண்டுமின்றி உழைப்பாருண்டு;
முதற்தர உடைகள் உடுப்பதுமுண்டு.
கொண்டுவருவார் ஊண் உடையன்று;
கொடுமை வெறுக்கும் அறிவே நன்று.
கண்டுகொண்ட பிள்ளைகள் இன்று,
கடவுளரசில் வாழ்வார் நன்று!
ஆமென்.

குறைகூறும் கூட்டம்!

குறைகூறும் கூட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.
31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
குனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,
குறைதான் கூறும் நம் சுற்றம்.
இனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,
எண்ணம் கெட்டால் பிதற்றும்.
தனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,
தம்மைத் திருத்துவதே மாற்றம்.
பணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,
பாராட்டார்க்கு ஏமாற்றம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions