ஒன்றும் போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:20-24.
20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
23 பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;
24 சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று மட்டும் உள்ளது என்று,
உறங்கும் இன்றைய கிறித்தவமே,
நன்று என்று நன்மைகள் செய்ய,
ஓன்றும் போதும் உன்னகமே.
கன்று ஈன்ற பசுக்கள்கூட,
கனிவாய்ப் பாலைக் கொடுக்கையிலே,
இன்று உந்தன் அன்பினாலே,
யாவும் வெல்வாய், தடுக்கலையே!
ஆமென்.