2018

இத்தனை ஆண்டுகள்…..
இத்தனை ஆண்டுகள் எனக்கீந்த,
இறைவா உனக்கென என் செய்தேன்?
பித்தனாய்ப் பொருளைச் சேர்ப்பதற்கு,
பெரும்பிழை அம்புகள்தான் எய்தேன்!
அத்தனைச் செயல்களும் வீணென்று,
அறிந்தபின் உன்னிடம் நான் வந்தேன்.
சித்தம் இனிமேல் உனதென்று
செய்திடும் உறுதியில் எனை ஈந்தேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
Virus-free. www.avast.com