கடவுள் இல்லை!

கடவுள் இல்லை!

சாதிகள் பகுத்ததும் கடவுள் இல்லை.
சமயங்கள் வகுத்ததும் கடவுள் இல்லை.
நீதியை விடுவதும் கடவுள் இல்லை. 
நேர்மை இலாரில்தான் கடவுள் இல்லை!
ஆதியின் முன்பும் மனிதர் இல்லை.
அனைத்தும் படைக்கையில் நாமும் இல்லை. மீதியிருப்பதை ஆய்ந்தறிவோம்; மீண்டும் சொல்லோம் கடவுள் இல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, text
LikeShow More Reactions

Comment

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

வயலில் வேலை

செய்தால்தான்,

வாய்க்குச்சுவையாய்,
சோறு வரும்.

வருவாய் இல்லை,
விட்டு விட்டால்,

வாழ நமக்கு
ஏது தரும்?

முயலும் உழவன்
முன் வந்தால்,

முதலில் மதிக்கக்
கற்று விடும்.

முற்காலத்துப்
பிழை நீக்கி,

முற்றும் நன்மை
பெற்று எடும்!

(கெர்சோம் செல்லையா)

Image may contain: 1 person, smiling, beard, outdoor and close-up
LikeShow More Reactions

Comment

யார் கடவுள்?

யார் கடவுள்?

உண்மையின் உருவே கடவுள்.
ஒளியின் அறிவே கடவுள்.
பண்பின் நிறைவே கடவுள்.
படைத்து மீட்பவர் கடவுள்.
அன்பின் வடிவே கடவுள்.
அதற்கெனப் பிறந்தவர் கடவுள்.
நன்மையின் ஊற்றே கடவுள்.
நம்முள் உண்டோ கடவுள்?

– கெர்சோம் செல்லையா.

Image may contain: people standing, tree, grass, sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பொய் துறப்போம்!

பொய் துறப்போம்!

எத்தனை வகையாய்ப் பொய்யுரைத்தோம்?
எவ்வாறெல்லாம் அதை மறைத்தோம்?
அத்தனை செய்தும்,நேர்மை என்றோம்.
அறவழி அறியாதே சென்றோம்.

இத்தனைத் தவறுகள் இனி தொடர்ந்தால்,
எவரும் மதியார், இதை மறந்தோம்.
பித்தராய் வாழ்வை இழக்காது,
பேரருள் பெற்றிட, பொய் துறப்போம்!

-கெர்சோம் செல்லையா.
!

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment