மொத்தமும் தமது சொத்தென்று!

மொத்தமும் தமது சொத்தென்று!
நற்செய்தி மாலை: மாற்கு 12:1-3.
“இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ‘ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
அத்தனையும் தம் திறனென்று,
அறியாமையைத் தெரிகின்றார்.
மொத்தமும் தமது சொத்தென்று,
முதலுடன் பயனையும் உரிகின்றார்.
குத்தகை பெற்றவர் என மறந்து,
கொள்ளை, கொலையும் புரிகின்றார்.
இத்தனை செய்பவர் இந்நாளில்,
யாவுமிழந்து திரிகின்றார்!
ஆமென்.

Image may contain: 1 person

வெந்நீரை வடித்துழைத்த காசு!

வெந்நீரை வடித்துழைத்த காசு!

ஐநூறு ஆயிரங்கள் வேண்டாமே;
ஐம்பதும் நூறுந்தான் வேண்டுமே!
எந்நாட்டில் இப்படி யார் சொல்வார்?
இந்தியர்தான் முதன்முதலில் சொல்கின்றார்!

செந்நாய்கள் கடிப்பதுபோல் சேர்ப்போமே,
சொன்னவர்கள் இன்றெங்கே? பார்ப்போமே!
வெந்நீரை வடித்துழைத்த காசு மட்டும்
வேகாது, என்றறிந்து, ஈர்ப்போமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: fire and one or more people