விளையும் வகை நானறியேன்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:26-29.
“தொடர்ந்து இயேசு, ‘ இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
வித்திட்டவன் ஆனாலும்,
விளையும் வகை நானறியேன்.
முத்து முத்தாய் மணிக்கதிர்கள்,
முதிருவதைக் காண்கின்றேன்.
இத்தரையில் இறையரசும்
இப்படித்தான் வளர்கிறதே.
கொத்து கொத்தாய் அறுப்போமே;
கிறித்துசொல் உ ரைப்போமே!
ஆமென்.