மனிதன்!
இறை மொழி: யோவான் 19:5.
5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
அறிவுக்கப்பால் ஆளும் தெய்வம்
அன்பு வடிவில் புவி வந்தார்.
இறையருள் வாக்கை நிறைவாக்கும்,
ஈடிலா பணிக்கு உரு தந்தார்.
மரியாள் மகனாய் மானிடர் கண்டும்,
மக்களை மீட்க இறை வந்தார்.
புரியாதவர்கள் கண்கள் திறக்கும்;
புனித இயேசு தனைத் தந்தார்!
ஆமென்.