நலம் தரும் இயேசு!

நலம் தரும் இயேசு!

நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.

“மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.”
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.
 
நலம் தரும் இயேசு!
நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.
"மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை."
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.
Like ·  · Share

Leave a Reply