நற்செய்தி

இன்று கேட்கும் இறைவனின் வாக்கு
நன்கு நம்மைச் சீராக்கிடட்டும்.
என்று வேண்டி எழுதும் நானும்
அன்பில்வாழ அருள் பெருகட்டும்!

நல்வாழ்த்து:
ஒழியா அன்பில் நடப்பதுதானே
உண்மையான இறைவழிபாடு.
வழியாய் வந்த கிறித்துவைத்தானே
வணங்கிப் புகழ்தல் நற்பண்பாடு!

நல்வாக்கு:
மத்தேயு 24:34-35.
”இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”

நல்வாழ்வு:
மண்ணழியும்,
மரம் செடிகொடியும் அழியும்.
விண்ணழியும்,
விளக்குச் சுடரும் அழியும்.
கண்ணுள் வந்த
காட்சிகள் அழிய, எதுதான் நிற்கும்?
எண்ணுகின்றேன்;
இயேசுவின் வாக்கு நிலைக்கக் கண்டேன்!
ஆமென்.
www.thetruthintamil.com

 

Leave a Reply