துன்புற்ற இவ்வுலகில்!
இறை மொழி: யோவான் 16: 33.
33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
துன்புற்ற இவ்வுலகில், துணையாகும் இறையே,
துணிவும் உன் ஈவே, தொடர்ந்தெனை நிறையே.
இன்புற்று வாழுங்கால் எண்ணுவேன் குறையே;
யானும் உனைப் பார்த்து, உதவுவேன் முறையே.
அன்பற்ற மனிதர்களாய் வாழ்பவர்கள் கறையே.
அறிந்தும் நடவார்கள், அடைவார்கள் அறையே.
தென்பட்ட மக்களுக்குத் தேவை நல்லுரையே.
தெரிவிக்க அடிக்கிறேன், இறையரசு பறையே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.

Like
Comment
Share