நல்வாழ்த்து:
படையும் நம்பேன், எடையும் நம்பேன்.
படைத்தவர் உமையே நம்பிடுவேன்.
கிடைக்கும் இந்த புதிய நாளில்
கிறித்து புகழைப் பாடிடுவேன்!
படையும் நம்பேன், எடையும் நம்பேன்.
படைத்தவர் உமையே நம்பிடுவேன்.
கிடைக்கும் இந்த புதிய நாளில்
கிறித்து புகழைப் பாடிடுவேன்!
நல்வாக்கு:
மத்தேயு 26:38-39.
“அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ‘ என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ‘ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
நல்வாழ்வு:
துன்பக் கடலில் நீந்துகிறேன்;
துயரக் குவளையும் ஏந்துகிறேன்.
இன்பம் மட்டும் போதுமென்று,
இதனை விடவும் விரும்புகிறேன்.
அன்றைய நாளின் உம் வேண்டல்,
அருள் பொழியத் தெளிவுற்றேன்.
ஒன்றுமில்லை என் வலியே;
உணர்ந்து நானும் குடித்திடுவேன்!
ஆமென்.