தவற்றை நினைப்பீரா?

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
“தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ‘ இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ‘ என்று கூறினார்கள்.”

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால்
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத
மடமையில் கடவுளைக் காண்பீரா?
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
"தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள்."

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட 
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால் 
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத  
மடமையில் கடவுளைக் காண்பீரா? 
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.
 

Leave a Reply