நற்செய்தி மாலை: மாற்கு 1:29-31.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்:
“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.”

நற்செய்தி மலர்:
ஆயிரம் கோடிகள் சேர்த்தாலும்,
அத்துடன் பொன் பொருள் கோர்த்தாலும்,
நோயினில் ஒருவர் விழுந்துவிட்டால்,
நொந்தே போகிறார், பாருங்களே!
தீயினில் விழுந்து துடிப்பதுபோல்,
தேம்பி அழுதலை விட்டுவிட்டு,
சேயினின் கைகள் தேடுதல்போல்,
தெய்வம் பற்றிட வாருங்களே!
ஆமென்.