கும்பலின் நேர்மை!
இறை மொழி: யோவான் 19:14-16
14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
இறை வழி:
ஆட்டமும் அகந்தையும் அள்ளியே விட்டு,
ஆள்பவர் நடப்பது கடுமையாம்.
கூட்டமும், கூச்சலும் கூறுதல் கேட்டு,
கொடுக்கும் தீர்ப்போ கொடுமையாம்.
வேட்டைக்காரரை நடுவாராய் வைத்து,
வேண்டி நாம் கிடப்பது மடமையாம்.
ஓட்டைப் பைகளை உடனடி தைத்து,
உண்மை சேர்ப்பதே கடமையாம்!
ஆமென்.