ஒளியே , நான் புகழ்வது, இறை மொழியே!

நல்வாழ்த்து:
இன்பம் ஊட்டும் இயற்கை ஒளியே,
எடுத்துச் சொல்ல மறப்பின் பழியே.
உன்னைப் படைத்த இறையின் மொழியே,
உண்மையில் அழகு; அதுதான் வழியே!
நல்வாக்கு;மத்தேயு 26:33-35.
“அதற்குப் பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். பேதுரு அவரிடம், ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நல்வாழ்வு:
ஊன் உணர்வில் உரைப்பதுவும்
உண்மையாய் இருக்காது.
நான் முடிப்பேன் என்பதுவும்
நடுவீட்டைத் தாண்டாது.
தேன் மதுரத் தமிழ்ப்பாவும்,
தெவிட்டாமல் இருக்காது.
வான் அரசர் திருவாக்கோ
வழுவாது நிற்கிறது!
ஆமென்.

Leave a Reply