முறிக்க முயன்றும் முடியவில்லை!
இறை மொழி: யோவான் 19: 31-33.
31. அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
32. அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
இறை வழி:
பண்டிகை, சடங்கு விழாவென உழைத்தும்,
பண்பை வளர்க்க உழைக்கலையே.
சண்டியர் சேர்த்து தலைவராய்ப் பிழைத்தும்,
சமய அறிவில் தழைக்கலையே.
முண்டியடித்து உரிமையைப் பெற்றும்.
முழங்கால் முறிக்க முடியலையே.
மண்டையில் நான்கு எழுத்து கற்றும்,
மனம்மாறாவிடில் விடிவிலையே!
ஆமென்.