உடை உரிந்தார்!
இறை மொழி: யோவான் 19:23-24.
23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
இறை வழி:
இருந்த சொத்து உடுத்திய உடைகள்;
இயேசுவினின்று உரிந்தார்கள்.
தெரிந்த மானம் மறைக்கா படைகள்,
திருடி, பங்கிடத் தெரிந்தார்கள்.
வருந்தி அழுது உடுத்தும் கைகள்,
வராதிருந்ததில் வியப்பில்லை.
திருந்தினால் தான் திறக்கும் பைகள்;
தேவை கனிவு, கயப்பில்லை!
ஆமென்.